
இப்போல்லாம் நாம 80 வயசைத் தாண்டி வாழறது ரொம்பவே சர்வ சாதாரணமாகிருச்சு. ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி எல்லாம் பெரும்பாலான மக்கள் சுமாரா ஒரு 60 வயசு வரத் தான் வாழ்ந்தாங்க, அப்போ அதுவே பெரிய விஷயமா இருந்துச்சு. இதுக்கு காரணம் அந்தக் காலத்துல நோய்களைக் கன்டுபிடிக்க கூடிய கருவிகளோ முன் எச்சரிக்கை விஷயங்களையோ அதிகமா இல்ல. ஆனா இப்போ புதுசு புதுசா நிறைய தொழில்நுட்பங்களும் சுகாதார பராமரிப்புகளும் வந்துருச்சு. அறிவியல் சார்ந்த விஷயங்கள்ல பெரிய அளவுல மேம்பட்டுப் புதுசா நிறைய விஷயங்களை நாம கண்டுபிடிச்சுருக்கோம். இதனால நம்ம அம்மாவும் அப்பாவும் நம்ம கூட ரொம்ப காலத்துக்கு வாழுறாங்க.
இந்தமாதிரி மனிதனோட சராசரி ஆயுட்காலமும் அதிகமாகிறது என்னதான் ஒரு சந்தோசமான விஷயமா இருந்தா கூட ஒரு பக்கம் நம்ம ஆயுள் கூடும்போது, இன்னொரு பக்கம் நமக்குச் சில உடல்நலப் பிரச்சனைகளும் வந்து சேருது. சர்க்கரை நோய், இதயக் கோளாறுகள்னு இந்த மாதிரி வரக்கூடிய நோய்களோட இந்தப் பட்டியழும் கொஞ்சம் நீளமாதான் இருக்கு. வயதானவர்களுக்கு ஏற்படும் உடல்நல பிரச்சனைகள் என்பது வெறும் நோய்கள் வருவது மட்டுமில்லாம அது அவர்களோட தினசரி வேலைகளையும் சின்ன சின்ன சந்தோஷங்களையும், ஏன் அவங்க சுதந்திரத்தையும் கூடப் பாதிக்கக்கூடியதா ஆகிருது.
இதெல்லாம் கேட்டு வயசாகிட்டா நமக்கு இவ்ளோ பிரச்சனை வந்துருமானு யோசிச்சு மலைச்சு போக வேண்டாம். இதெல்லாம் சொல்லி, உங்களைப் பயமுறுத்துறது எங்க நோக்கமில்ல. இங்கு நாம பேசப்போறது, வயதானவர்களுக்கு ஏற்படும் பொதுவான உடல்நலப் பிரச்சினைகள் என்னென்ன அப்படிங்கிற பட்டியல் மட்டுமில்ல, அந்த வயதானவர்களுக்கு ஏற்படும் பொதுவான உடல்நலப் பிரச்சனைகளை எப்படித் தடுப்பது, ஒரு வேளை அதையும் மீறி அந்தப் பிரச்சனைகள் நமக்கு வந்தாக்கூட அதை நாம எப்படிச் சமாளிச்சு, ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்றது என்பது பத்தித்தான்.
வாங்க, இந்தச் சவால்களை நாம ஒவ்வொன்னாப் பார்த்து, அதற்கான தீர்வுகள் என்னனென்னனு அலசுவோம்.
வயசான காலத்துல வரப் பொதுவான நோய்களை நாம எதிர்கொள்றது எப்படி?
வயசானதும் அதோட சேந்து பெரியவங்களுக்கு கூடவே வரப் பிரச்சனைகள் என்னென்ன? அதாவது, வயதானவர்களுக்கு ஏற்படும் பொதுவான உடல்நலப் பிரச்சினைகள் என்று ஒரு பட்டியல் போட்டால், அதில் சில நிரந்தர உறுப்பினர்கள் உண்டு.
முதலாவது, இதய நோய் (Heart Disease). அடுத்து, அதன் நெருங்கிய நண்பனான நீரிழிவு (வகை-2), அதாவது நம்மில் பலரும் சொல்லும் ‘சுகர்’. கூடவே, எதற்கெடுத்தாலும் எகிறி நம்மைப் பதட்ட படுத்தும் உயர் இரத்த அழுத்தம் (High Blood Pressure). இந்த ரத்த அழுத்தம் அதிகமாகி நூற்றியெண்பதை (180) தொடும்போது வரும் அவஸ்தை இருக்கிறதே, அது மிகவும் சிரமமானது. அப்புறம், உட்கார்ந்தால் எழுந்திருக்க விடாமலும், நடந்தால் வதைக்கவும் செய்யும் கீல்வாதம் (Arthritis).
இந்த நோய்களின் பெயர்கள் வெவ்வேறாக இருந்தாலும், இவற்றுக்கெல்லாம் ஒரு பொதுவான சூத்ரதாரி இருக்கிறான். அதுதான் உடல் பருமன் (Obesity). நமது சோஃபா-டிவி-ஆப் (Sofa-TV-Off) என்ற உக்கார்ந்த-சாப்பாடு வாழ்க்கைமுறைக் கொண்டுவந்துவிடும் வினைகளில் இது முக்கியமானது.
இவர்களுடன் இன்னொருவரும் கூட்டணி சேர்வார். அது எலும்புப்புரை (Osteoporosis). அதாவது, நமது எலும்புகள் தேன்கூடு போல அடர்த்தி குறைந்து, லேசான தடுமாற்றத்திற்கே ‘டக்’ என்று உடையும் நிலை.
இவ்வளவு பிரச்சனைகளைப் பத்திப் பேசிருக்கோமே வயசானவங்களுக்கு இவ்ளோ கஷ்டங்களா இருக்குனு நீங்கப் பயப்பட வேண்டாம். இதுல ஒரு நல்ல விஷயமும் இருக்கு. இந்த அத்தனைப் பிரச்சனைகளையும் சமாளிக்க ‘வாழ்க்கைமுறை மாற்றம்’ அப்படின்ற ஒரே ஒரு சிறப்பான செயல் மட்டுமே நமக்குப் போதும்.
இது ஒரு சுலபமான விஷயம் தான். பெரும்பாலான நேரங்களில் இந்த எல்லா நோய்களுக்கும் காரணங்கள் ஒன்றாக இருக்கும் பொது அதற்க்கான தீர்வும் ஒன்றாகத்தானே இருக்க வேண்டும். ஒரு சீரான உணவுமுறை மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை, இதய நோய் முதல் நீரிழிவு வரைப் பல பிரச்சனைகளைச் சரிசெய்கிறது. உணவில் முழு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் என்று இயற்கையான விஷயங்களைச் சேர்த்துக்கொண்டு, உப்பு மற்றும் பாக்கெட் உணவுகளில் இருந்தும் விடைப் பெறுவது முதல் படி.
மூட்டு வலிக்காகப் பயந்துபோய் முடங்கிடாம, நடைப்பயிற்சி, நீச்சல் போன்ற குறைந்த தாக்கப் பயிற்சிகள் (low-impact exercises) செய்யலாம். எலும்புகளை வலுப்படுத்த, சின்ன சின்ன எடைத் தாங்கும் பயிற்சிகள் (weight-bearing exercises) அவசியம். கூடவே, கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைஞ்ச பால், கீரைப் போன்றவற்றைச் சேத்துக்கிட்டா, எலும்புப்புரை நம்மை அண்டாது.
உடல் ஆரோக்கியம் ஒருபக்கம் இருந்தாலும், நம்ம மனசும் மற்ற புலன்களும் சீராக இருந்தால்தானே வாழ்க்கை முழுமையடையும். அடுத்ததா, நாம கவனிக்க வேண்டிய மனநலம் மற்றும் புலன் சார்ந்த சவால்களைப் பற்றிப் பார்ப்போம்.
உடலைப்போன்றே உள்ளத்தினையும் கவனம் செலுத்திடுவது அவசியம்
சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் மூட்டுவலியென வன்பொருள் (hardware) பிரச்சினைகள் போன்ற உடல் நிலைகளைப் பற்றி நாம விவாதித்தோம். ஆனால் சரியான வன்பொருளைக் கொண்ட ஒரு கருவிக்கு அதன் மென்பொருள் (software) சமமாக முக்கியமில்லையா? இங்குள்ள மென்பொருள் நம் மனதையும் ஆன்மாவையும் உருவாக்குகிறது.
நம்ம கண்ணுக்குத் தெரியுற உடம்புல ஏற்படுற நோய்களைப் பத்திதான் வயதானவர்களுக்கு ஏற்படும் உடல்நல பிரச்சனைகள் பத்தி பேசும்போது நாம பேசிக் கவலைப்படுகிறோம். ஆனா, கண்ணுக்குத் தெரியாமல், மனதுக்குள் ஒரு மௌன யுத்தம் நடந்துகொண்டிருக்கும். மன அழுத்தம் (Depression), தனிமை, மற்றும் டிமென்ஷியா (Dementia) போன்ற அறிவாற்றல் குறைபாடுகள் இந்த யுத்தத்தின் தளபதிகள். இதில் கொடுமை என்னவென்றால், மருத்துவ உதவி தேவைப்படும் மன அழுத்தத்தை, நாம் ‘வயசான காலத்துல கொஞ்சம் அப்படித்தான் இருப்பாங்க’ என்று ஒரு பெருமூச்சுடன் கடந்துவிடுவதுதான்.
இதோட, அவர்களின் புலன்களும் மெல்ல மெல்ல அவங்களுக்கு ஒத்துழைக்க மறுக்கும். பார்வை மற்றும் செவித்திறன் இழப்பு என்பது வெறும் உடல் குறைபாடு அல்ல; அது அவர்களை மெல்ல மெல்லச் சமூகத்திடமிருந்து அந்நியப்படுத்தும் ஒரு சக்தி. உதாரணமாக, கண்புரை (Cataract) வந்து பார்வை மங்கும்போது, அவர்களுக்குப் பிடித்தமான டிவி நிகழ்ச்சி பார்ப்பதோ, பேப்பர்ப் படிப்பதோகூட நின்றுபோகும். காது சரியாகக் கேட்காததால், நாம என்ன சொன்னோம்னு கேட்டதே திரும்பத் திரும்பக் கேட்பாங்க, காலம் போகப் போகத் திரும்பத் திரும்பக் கேட்கச் சங்கடப்பட்டு, மெல்லப் பேச்சைக் குறைத்து, ஒரு கட்டத்தில் ஹாலுக்கு வருவதையே தவிர்த்துவிடுவார்கள். இந்தச் பிரச்சனைகள்தான் வயதானவர்களுக்கு ஏற்படும் பொதுவான உடல்நலப் பிரச்சினைகளில் மிக நுட்பமானவை, ஆனால் இதெல்லாம் அவங்களுக்கு ரொம்ப ஆழமான பாதிப்பை உண்டாக்குறது.
இதெல்லாம் பாத்து பயப்படவே தேவையில்லை. இதுக்கெல்லாம் தீர்வு இல்லையானு கேட்டா நிச்சயம் இருக்குது. அவர்களோட தனிமையைப் போக்க, நம்மளோட மன ஆதரவு அவங்களுக்கு ஒரு மாமருந்து. ஒரு வீடியோ கால்ல (video call) பேரப் பிள்ளைகளின் முகத்தைப் பார்த்தாலே, அவர்களின் முகத்தில் எல்லாம் சாதிச்ச மாதிரி மகிழ்ச்சி வந்துரும்.
வயதானவர்களின் மனநலத்தை வளர்ப்பதற்கு சில எளிய குறிப்புகள் :
- சுடோகு (Sudoko), குறுக்கெழுத்துப் புதிர்(crossword puzzle) என்று மூளைக்குத் தினமும் சின்னதாக ஒரு பயிற்சி அளித்தால் (‘exercise’).
- பழைய நண்பர்களுடன் தொலைபேசியில் ஒரு பத்து நிமிடம் அரட்டை.
- மனதை அமைதிப்படுத்தத் தியானமோ, மெல்லிய இசையோ போதும்.
- நல்ல தூக்கம் மிக முக்கியம். உறங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பு செல்ஃபோன் திரையிலிருந்து விடைப்பெற்று வருவது நல்லது.
இந்தச் சவால்களை எல்லாம் நாம புரிஞ்சுகிறது தான் நாம செய்யவேண்டிய முதல் படி. ஆனா அப்டி புரிஞ்சுக்கிட்டா மட்டும் போதுமானு கேட்டா கண்டிப்பா இல்லனுதா சொல்லணும். அப்போ அடுத்ததாக, நாம என்ன செய்ய வேண்டும்? தொலைவில் இருந்தாலும் சரி, கூடவே இருந்தாலும் சரி, நம் பெற்றோரின் நலனை உறுதி செய்ய நாம் எடுக்க வேண்டிய செயல்முறைப் படிநிலைகள் என்னென்ன? வாங்க, அடுத்த பகுதியில் விரிவாகப் பார்ப்போம்.
மேலும் வாசிக்க : உங்கள் தூக்கத்தின் மீட்டமைக்கும் பொத்தான்
வயதானவர்களின் உடல்நிலை ஆரோக்கியத்திற்கான செயல்முறைத் திட்டம்!
வயசானவங்களோட ஆரோக்கியத்தோட முக்கியத்துவத்தப் பத்தி நாம இவ்ளோ பேசிட்டோம். இனி செயல் முறைகளைப் பற்றிப் பாக்கலாம். நீங்கள் உங்க பெற்றோருடன் இருந்தாலும் சரி, ஏதோ காரணங்களால கொஞ்சம் தூரமா இருந்தாலும் சரி, இல்ல வெளிநாட்டுலயே இருந்தாலும் சரி எல்லோருக்கும் அவங்கவங்களுக்கான ஒரு செயல் முறைத் திட்டம் இருக்கு.
பெரியவர்கள் நம்முடன் இருக்கும்போது…
பெரும்பாலான மருத்துவர்கள் வழுக்கி விழுவதனாலேயே அதிகமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். இது ஒரு சின்ன விஷயமாகத் தோன்றலாம், ஆனால் இதுதான் யதார்த்தம். கழிவறையில் சறுக்கல் எதிர்ப்பு பாய் (anti skit mat) போடுவது, நடக்கும் வழியைத் தடைகள் இல்லாமல் சுத்தமாக வைப்பது போன்ற எளிய வீட்டில் மாற்றங்கள் செய்தல் பெரிய ஆபத்துகளைத் தடுக்கும்.
அடுத்து, உணவு. தினமும் என்ன சமைப்பது என்று யோசிப்பதை விட, ஒரு உணவுத் திட்டத்தை முன்கூட்டியே திட்டமிடுதல் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். கூடவே, காலண்டரில் குறித்து வைத்து, அவர்களைத் தவறாமல் மருத்துவப் பரிசோதனைகளுக்கு அழைத்துச் செல்வது நமது கடமை.
நம்மை விட்டுச் சற்று தூரமாய் இருந்தாலும் அது ஒரு தடையல்ல!
பலபேரு வேலை, கல்வினு ஏதோ ஒரு காரணத்துக்காகப் பெற்றோர்களை விட்டுக் கொஞ்சம் பிரிச்சுருக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படுத்து அப்போ நாம பக்கத்துல இல்லையே நம்மல கூட இருந்து பாத்துக்க முடியலையேன்னு கவலைப்பட வேண்டாம். தொழில்நுட்பம் நம் கையில்! தொலைவிலிருந்து பெற்றோரின் ஆரோக்கியத்தைக் கண்காணித்தல் இன்று மிகவும் சுலபம். தொலை மருத்துவம் (Telemedicine), விதவிதமான ஆரோக்கிய செயலிகள் என எல்லாமே ஒரு வரப்பிரசாதம். இதுதான் உண்மையான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய கண்காணிப்பு.
முதலில், நம்ம வீட்டுல இருக்குற பெரியவங்களுக்கு ஒரு நல்ல டிஜிட்டல் இரத்த அழுத்த மானி மற்றும் சர்க்கரை கண்காணிப்பு கருவி வாங்கிக் கொடுங்கள். திடீரென்று ஒருநாள் உயர் இரத்த அழுத்தம் நூற்றியென்பது (180) ஆகிவிட்டது என்று போன் வருவதற்கு முன்பு, நாமே அதன் அளவுகளை ஒரு செயலி (app) மூலம் தினமும் பார்க்கலாம். தினசரி ஒரு வீடியோ கால் (Video Call) என்பது வெறும் பேச்சு அல்ல; அது நாம் அவர்களுக்குக் கொடுக்கும் மிகப்பெரிய மன ஆதரவு.
இந்த இரண்டையும் விட முக்கியமானது ஒரு அவசரத் திட்டம், அதாவது ஒரு அவசர நிலை ஏற்பட்டால் என்னென்ன செய்யணும்னு முன்கூட்டியே ஏற்பாடு செய்தல். பெற்றோரின் மருத்துவக் குறிப்புகள், மருத்துவர் எண்கள், அவசரத் தொடர்பு எண்கள் என அனைத்தையும் ஒரே ஃபைலில் (file) வைத்திருப்பது, வயதானவர்களுக்கு ஏற்படும் பொதுவான உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக வரும் எந்த நெருக்கடியையும் பதற்றம் இல்லாமல் சமாளிக்க உதவும்.
இந்த வழிமுறைகள் எல்லாம் நோயைத் தடுப்பதற்கு மட்டுமல்லங்க அதைவிட முக்கியமாக, அவர்களின் சுதந்திரத்தையும் சுயமரியாதையையும் காப்பாற்றுவதற்குத்தான். சரி, இந்த நோய்கள் நமக்கு வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்த்துவிட்டோம். ஒருவேளை வந்துவிட்டா, அவற்றை எதிர்த்துப் போராடுவது என்பது கடினமாக இருந்தாலும், ஒரு நண்பனைப் போல உடன் வைத்துக்கொண்டு நிர்வகிப்பது எப்படி என்று அடுத்ததாக அதைப் பற்றிப் பேசுவோம்.
வயதானவர்களுக்கு நாம் அளிக்கக்கூடிய வாழ்க்கைப் பரிசு
நாம எல்லாரும் வயசாகுறது நம்ம வாழ்க்கையோட முடிவுனு நினைச்சுட்டு இருக்கோம் ஆனா அது முடிவு இல்லங்க. அது நம்ம வாழ்க்கையோட இன்னொரு அத்தியாயத்தோட தொடக்கம் தான். இன்னைக்கு நம்ம பெற்றோர்கள் 80 வயதைக் கடந்து வாழ்றது ஒருவகையில கூடுதல் வாழ்க்கையை வாழுறது மாதிரி தான். இந்தக் கூடுதல் வாழ்க்கையை அவங்க வெறும் கடமையாக இல்லாம, சந்தோஷமாவும் சுதந்திரமாவும் அனுபவித்து வாழ வைக்கறது நம்ம கையிலதான் இருக்குது.
நாம் இதுவரைப் பேசிய வயதானவர்களுக்கு ஏற்படும் பொதுவான உடல்நலப் பிரச்சினைகள் பலவற்றுக்கும் தடுப்பு மருந்து, என்னனா ஒரு எளிமையான வாழ்க்கைமுறை மாற்றம்தான். இது ஏதோ பெரிய ராக்கெட் அறிவியல் எல்லாம் இல்லைங்க. சீரான உணவு, சின்னச்சின்ன உடற்பயிற்சிகள், அப்பறம் முக்கியமாக, சரியான நேரத்தில் மருத்துவப் பரிசோதனைகள். இந்த மூன்றும் சேர்ந்த ஒரு கூட்டு (combo) தான் நம்மல பல பிரச்சனைகள் வரத்துக்கு முன்னாடியே காக்கும்.
நாம இத்தன நாளா இதையெல்லாம் கவனிக்க தவறிட்டோமோன்ற குற்றவுணர்ச்சியோ இல்ல கவலையோ இனிமே நமக்குத் தேவையே இல்ல. ஆனா இனிமேலாவது நாம செய்யவேண்டிய மாற்றங்கள் என்னனு யோசிச்சு அதுக்குக்கான அடிய தாமதிக்காம எடுத்து வைக்கணும். நம்ம வீட்டு பெரியவங்களோட ஆரோக்கியத்துக்கும், சுறுசுறுப்பான சந்தோசமான வாழ்க்கைக்கும் இது தான் நாம தர மிகப் பெரிய பரிசு. அதனால இந்தப் பயணத்தை நாம இன்னைக்கே தொடங்குவோம்.